1. Home
  2. தமிழ்நாடு

வந்தாச்சு புதிய ரூல்..! இனி ஆதாரில் பெயர் மாற்றம் செய்வது கடினம்..!

1

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், முகவரி உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்து கொள்ள அனுமதிக்கிறது. இந்த புதுப்பிப்புகளை ஆன்லைனில் அல்லது ஆதார் பதிவு மையங்கள் மூலமாக எளிதாக செய்யலாம்.

இந்நிலையில் ஆதார் விவரங்களைப் அப்டேட் செய்வதற்க்கான வழிகாட்டுதல்களை இப்போது கடுமையாக்கியுள்ளது  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI).

ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்கான விதிகள் முன்பை விட கடுமையாக்கப்பட்டுள்ளன. உங்கள் முழுப் பெயரையும் அல்லது சில எழுத்துக்களையும் மாற்ற விரும்புகிறீர்களா. கேஜெட் அறிவிப்புடன், விண்ணப்பதாரர் தனது பழைய பெயர் எழுதப்பட்ட பழைய அடையாளச் சான்றினையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் பான் கார்டு, வாக்காளர் அடையாள கார்ட், ஓட்டுநர் உரிமம், சேவை அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை அடங்கும். இது மட்டுமல்லாமல், பயனர் பெயரை மாற்றப் போகிறார் என்றால் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும். விண்ணப்பதாரருக்கு 2 முயற்சிகள் மட்டுமே வழங்கப்படும் என்று UIDAI (வழியாக) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், உங்கள் முகவரியைப் புதுப்பிக்கவோ அல்லது புதிதாகப் பதிவு செய்யவோ விரும்பினால், இப்போது இதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, எந்த பொதுத்துறை பேங்கின் பாஸ்புக்கையும் வழங்கலாம். ஆனால் இதற்கு விண்ணப்பதாரர்கள் பேங்க் ப்ரஞ்ச மேலாளரிடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும், பேங்கின் பதிவேடுகளில் முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் e-KYC செயல்முறை முடிந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

பிறந்த தேதியில் திருத்தம் செய்வதில் விதிகள் கடுமையாகிவிட்டன. 18 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மாநில அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கு பாஸ்போர்ட் மற்றும் SSLC புத்தகம் செல்லாது. எனவே நீங்களும் உங்கள் ஆதார் அட்டையில் அத்தகைய மாற்றங்களைச் செய்யப் போகிறது என்றால், இந்த புதிய விதிகளை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் விண்ணப்பதாரர் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
 

Trending News

Latest News

You May Like