அமலுக்கு வந்த புதிய விதி : இனி புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் கட்டாயம்..!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் இணைக்க தவறினால், ஏற்கனவே உள்ள பான் எண் செயலிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், புதிய பான் கார்டு இணைப்பு பெற ஆதார் எண் கட்டயாம் என்ற விதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரை புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது. இனிமேல் ஆதார் அடையாள ஆவணம் இன்றி புதிய பான் கார்டு பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.