புது மாப்பிள்ளை பாவம்..! திருமணமாகி 25 நாட்களில் கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவி..!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.
அந்த மனுவில், சுந்தரமூர்த்தியின் மகன் கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன், இருவீட்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மணப்பெண் சாந்தினிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் முடிந்து முதல் இரவின் போது மணமகனிடம் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், கலையரசன் சாந்தினியை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், மீண்டும் அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் எல்லாம் சில நாட்களில் சரியாக விடும் என்று கூறிவிட்டு கார்த்தியின் வீட்டில் விட்டு சென்றுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சாந்தினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்றும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது கார்த்தி புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மனுவில் சுந்தரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் மகனை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்த பெண்ணுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கலையரசனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தியின் பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருமணம் ஆகி ஒரு மாதத்திற்கு உள்ளாக கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த மனைவியின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.