1. Home
  2. தமிழ்நாடு

திருமணத்திற்கு தடை ஏற்படுத்திய பக்கத்து வீட்டுக்காரர்.. கடையை இடித்து தள்ளி 90's கிட்ஸ் கெத்து !

திருமணத்திற்கு தடை ஏற்படுத்திய பக்கத்து வீட்டுக்காரர்.. கடையை இடித்து தள்ளி 90's கிட்ஸ் கெத்து !


தற்போது சமூகவலைதளங்களில் நடிகர் வடிவேலுக்கு இணையாக மீம்ஸ்களில் இடம்பெறுவது 90's கிட்ஸ் தொடர்பான மீம்ஸ்கள் தான். பழமை, பாரம்பரியம், திருமணம் போன்ற விவகாரங்களில் இவர்களை கலாய்த்து வருகின்றனர்.

அப்படி விளையாட்டாக இருந்த மீம்ஸ் உண்மை தானோ என யோசிக்க வைக்கும் சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. திருமணத்தை தடுத்து நிறுத்திய பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான கடையை ஜே சி பி இயந்திரம் மூலம் இடித்து இளைஞர் தரைமட்டமாக்கியுள்ளார்.

திருமணத்திற்கு தடை ஏற்படுத்திய பக்கத்து வீட்டுக்காரர்.. கடையை இடித்து தள்ளி 90's கிட்ஸ் கெத்து !

கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த ஆல்பின் மேத்யூவுக்கு திருமணத்திற்காக பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தடை ஏற்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியில் ஜோஷி என்பவர் கடை நடத்தி வருகிறார். இளைஞர் ஆல்வின் வீட்டிற்கு வரும் பெண் அவர் குறித்து தவறாகக் கூறி அவரின் திருமணத்தை ஜோஷி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆல்பின் மேத்யூ ஜேசிபி இயந்திரம் மூலம் ஜோஷியின் கடையை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like