இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது!
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று நடைபெறுகிறது. இந்தியாவிலேயே குடியரசுத் தினம் மற்றும் சுதந்திர தின விழாவன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்கு ராஜ கோபுரத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெறுகிறது.
அதன் படி இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்திய தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து நடராஜப் பெருமானின் திருவடியில் வைத்துப் பூஜிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க நடராஜப் பெருமானின் கனக சபையிலிருந்து வெள்ளித் தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து வேத மந்திரங்கள், தாள வாத்தியங்கள் முழங்க 142 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் வெங்கடேச தீட்சதர் மற்றும் தீட்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.