1. Home
  2. தமிழ்நாடு

தாய் அதிர்ச்சி..! ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் தடைசெய்யப்பட்ட புகையிலை..!

1

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவர் தனது வீட்டில் சிலிண்டர் காலியானதால், குழந்தைக்கு உணவு தர இணையத்தில் ஆர்டர் செய்திருக்கின்றார். ஜாஸ்மின் குழந்தைக்கு சைவ உணவு தர வேண்டும் என்பதனால், சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பிரபல உணவகமான கீதா கேண்டீன் என்ற உணவகத்தில் ஆர்டர் செய்திருக்கின்றார்.

cool lip

அப்போது காம்போ ஆஃபரில் தயிர் சாதம், சாம்பார் சாதம், காம்போ மீல் மற்றும் பேபி கார்ன், பெப்பர் ஃப்ரை உணவுகளை ஆர்டர் செய்திருக்கின்றார். ஜாஸ்மின், உணவு ஸ்விக்கி உணவு விநியோகம் செய்பவர்  மூலம் உணவை பெற்று இருக்கின்றார். உணவு டெலிவரி செய்யும் போது அதிலிருந்த பார்சல் பிரித்திருந்திருந்த்தாக கூறியிள்ள ஜாஸ்மின், பசியுடன் இருந்த குழந்தைக்கு, அப்பொழுது அந்த உணவை ஊட்டினார்.

பேபி கார்னை குழந்தைக்கு ஊட்டியபோது, ஜாஸ்மின் கண்களுக்கு வித்தியாசமான ஒரு பொருள் உணவில் இருப்பது  தெரிந்தது. பஞ்சு அடைத்த பை போல அது இருந்த அந்த பொருளை உற்று பார்க்கையில், பாப்கானில் இருந்த அந்தப் பொருள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களில் ஒன்றான கூல் லிப்  என்பது தெரியவந்தது.

கூல் லிப் குட்கா உணவில் இருப்பதைப் பார்க்கும் முன்னர், குழந்தைக்கு பேபி கார்ன் உணவை ஜாஸ்மின் ஊட்டி இருக்கின்றார். சிறிது நேரத்தில் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வயிறு வலி உபாதையுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அந்தப் பெண் இதுபோன்று உணவுகளை அலட்சியமாக டெலிவரி செய்யும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like