பிறை தென்பட்டது..! தமிழகத்தில் பக்ரீத் எப்போது?
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழா, ‘ஈத்உல்-அதா’ என்றும் தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
பக்ரீத் நாளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள், அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளிப்பது வழக்கம்.ஏழை, எளிய மக்கள், நண்பர்பகளுக்கு உணவு சமைத்து இந்த நாளில் இஸ்லாமியர்கள் வழங்குவார்கள். இந்த பக்ரீத் பண்டிகையும் பிறை பார்த்து தான் நிச்சயிக்கப்படுகிறது. அதன்படி நேற்று வானில் துல்ஹஜ் பிறை தென்பட்டது. இதனால் 2024ம் ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹுத்தின் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் குர்பானி கொடுத்தும், தொழுகையில் ஈடுபட்டும், ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்வர்.