1. Home
  2. தமிழ்நாடு

மக்களிடம் கொள்ளையடிக்கும் மோடி அரசு...சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ்!

Q

காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய மக்கள் சுரண்டப்படுகிறார்கள். ஒருபுறம் மோடி அரசு வரிச்சுமையை அதிகரித்து மக்களைச் சுரண்டுகிறது என்றால் மறுபுறம், அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. இது வெளிப்படையான ஒரு பொருளாதாரச் சுரண்டல்.
சில உண்மைகள் இங்கே: கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.9.20 ஆகவும், டீசலுக்கு ரூ.3.46 ஆகவும் இருந்தது. அது தற்போதைய மோடி அரசில் பெட்ரோலுக்கு ரூ.19.90 ஆகவும், டீசலுக்கு ரூ.15.80 ஆகவும் இருக்கிறது. இது முறையே 357 சதவீதம் மற்றும் 54 சதவீதம் அதிகம்.
கடந்த 11 ஆண்டுகளில் பெட்ரோலியத்துறையின் மூலம் அரசு ரூ.39.54 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு கச்சா எண்ணெயின் விலை பேரல் 108 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 65.31 அமெரிக்க டாலராக உள்ளது. அதாவது 40 சதவீதம் மலிவு இது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை யுபிஏ அரசை விட மோடி அரசில் அதிகமாக உள்ளது.
அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் மூலமாக கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. ஆனால் பொதுமக்களோ பெட்ரோல் டீசல் விலை உயர்வால் கொள்ளையடிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது.
அரசின் கொள்கைகள் இந்தத் தனியார் நிறுவனங்ளுக்கு எவ்வாறு பயனளித்தன என்பதை சிஏஜி தணிக்கைச் செய்யவேண்டும். இதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி உள்ளதா என்று சிவிசி மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.
பொதுமக்கள் பணத்திற்கு கணக்கு காட்டப்பட வேண்டும், அரசின் பொறுப்புகூறல் நிலைநிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like