1. Home
  2. தமிழ்நாடு

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டுள்ளது ... எதற்கு தெரியுமா ?

1

விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம் ஆகி உள்ளது.

இது குறித்து அஜய் பாசுதேவ் என்பவர் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளம்,எஸ்எம்எஸ் மூலமாக விளம்பரங்கள் கொடுக்க ஒன்றிய அரசு பயன்படுத்திய நிதி குறித்து அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது.

2014ம் ஆண்டு முதல் இணையதளம் எஸ்.எம்.எஸ்., டிஜிட்டல் விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.667.38 கோடியை மோடி அரசு அரசு செலவிட்டதும் ஆர்டிஐ-யில் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 2015-2016 ஆண்டில் ரூ.126 கோடி செலவிடப்பட்டது. 2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,974 கோடி செலவிட்டுள்ளது மோடி அரசு. அதிகபட்சமாக 2016-17 காலகட்டத்தில் விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.519 கோடியை பாஜக அரசு செலவிட்டுள்ளது.

இதில் பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர் உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்த தகவல் வெளியாகவில்லை. டிஜிட்டல், போஸ்டர், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு மோடி அரசு செலவிட்ட தொகை விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ரூ.3,641 கோடி செலவிட்ட மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like