காவலரை கத்தியுடன் துரத்திய கும்பல்; முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவேண்டும் - அன்புமணி..!

தமிழ்நாட்டில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா போதையில் திளைக்கும் மூன்று இளைஞர்கள் சீருடையில் உள்ள காவலர் ஒருவரை கத்தியுடன் துரத்தும் காணொலி மூலம் கஞ்சா போதை கொடுக்கும் துணிச்சலை உணர முடிவதாக கூறியுள்ளார்.
இளைஞர் சமுதாயம் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாக சீரழிவதை பொறுப்புள்ள தலைவராக சகித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள அவர், போதைபொருட்கள் ஒழிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையாகவே சர்வாதிகாரியாக மாறி கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
காவலரை கத்தியுடன் துரத்திய கஞ்சா போதை கும்பல்; தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 23, 2023
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் சீருடையில் உள்ள காவலர் ஒருவரை கஞ்சா போதையில் திளைக்கும் மூன்று இளைஞர்கள் கத்தியுடன் துரத்தும் காணொலி சமூக…