சுகாதரப் பணியாளர்களை பாராட்டி பரிசு வழங்கிய திமுக எம்எல்ஏ!

அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா வைரஸை பரவலை தடுத்து சிறப்பாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய மருந்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் பரிசு வழங்கி, பாராட்டினார்.
கொரோனா காலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இராஜபாளையம் தொகுதி பொதுமக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில், இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வார்டு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், தொகுதியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளில் இருந்தும் ஜமீன் கொல்லங்கொண்டான் மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கிராமப்புற ஏழை எளிய பொதுமக்களுக்கும் சிறப்பான உயர் தர சிகிச்சை வழங்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து, கிளை செயலாளர் வனராஜ், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.