மினிமம் பேலன்ஸ் இனி 50,000 ரூபாய் இருக்கனும்..! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல வங்கி..!
ஆகஸ்ட் 1, 2025 முதல் ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு வங்கிகளிலேயே அதிகபட்ச குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ள வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.
புதிய விதிமுறைகளின் விவரங்கள்:
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்கள்: இதற்கு முன்பு ₹10,000 ஆக இருந்த குறைந்தபட்ச இருப்புத்தொகை, தற்போது ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்கள்: இதற்கு முன்பு ₹5,000 ஆக இருந்த இருப்புத்தொகை, தற்போது ₹25,000 ஆக அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்கள்: இதற்கு முன்பு ₹2,500 ஆக இருந்த இருப்புத்தொகை, தற்போது ₹10,000 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலான உள்நாட்டு வங்கிகள், ₹2,000 முதல் ₹10,000 வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்தியன் வங்கி, கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஏற்கனவே குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதத்தை நிறுத்தி விட்டன.
HDFC வங்கி: மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் ₹10,000, அரைகுறை நகர்ப்புறங்களில் ₹5,000, மற்றும் கிராமப்புறங்களில் ₹2,500 குறைந்தபட்ச இருப்புத்தொகையாக நிர்ணயித்துள்ளது.