பெண் என நினைத்து 30 வருடங்களாக வாழ்ந்து வந்த ஆண்! மருத்துவர்கள் அதிர்ச்சி!!

30 வயதான பெண் ஒருவர் புற்றுநோய் சிகிச்சைக்கு சென்றபோது அவர் ஒரு ஆண் என்பதைக் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் பிர்பம்(30) என்பவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 30 வருடங்களாக இவர் எந்த பிரச்னையும் இல்லாமல் எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று தெரியவந்தது.
பிர்பமுக்கு ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் நோய் என்பது கண்டறியப்பட்டது. அதாவது அவர் மரபணு ரீதியாக ஆணாக பிறந்துள்ளார். ஆனால் ஒரு பெண்ணின் அனைத்து உடல் பண்புகளையும் கொண்டிருக்கிறார். சோதனை அறிக்கைகள் அந்த பெண்ணுக்கு குருட்டு யோனி இருப்பதாக தெரிவித்தது. அவர் கிட்டதட்ட பத்தாண்டுகள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த ஆலோசனை கூறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி குழந்தை பெற முடியாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
newstm.in