1. Home
  2. தமிழ்நாடு

வானதி சீனிவாசனுக்கு முக்கிய பொறுப்பு! பாஜக தலைமை அறிவிப்பு!!

வானதி சீனிவாசனுக்கு முக்கிய பொறுப்பு! பாஜக தலைமை அறிவிப்பு!!


தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார்.


இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பாஜக தேசியச் செயலாளர்கள் நியமனத்தின் போது தமிழகத்தில் யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு தற்போது பதவி வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like