நேற்று விண்ணில் நிகழ்ந்த மாயாஜாலம்.. மிஸ் பண்ணாலும் இன்னொரு வாய்ப்பு இருக்கு..!

விண்வெளியில் அடிக்கடி சில அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வகையில் 6 கோள்கள் ஒரே நெர்க்கோட்டில் வந்திருக்கின்றன.
உண்மையில் ஒரே நேர்க்கோட்டில் கோள்கள் வருவதில்லை. பூமியிருந்து பார்ப்பதற்கு ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை போல தெரிகிறது. இப்படி தெரிவது ஒன்னும் சும்மா காரியமில்லை. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி தெரியுமாம். அந்த வகையில் இன்று இரவு புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தலையை எட்டி பார்த்திருக்கின்றன.
இதை பார்க்க start finding அப்ளிகேஷன்களை மொபைலில் டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். மிக முக்கியம், அதில் லொகேஷனை மெட்ராஸ் என்று கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் நட்சத்திரம் இருக்கும் திசையை ஓரளவுக்கு சரியாக பார்க்க முடியும். சரி நைட்டு 11 மணிக்கு மேல ஆயிடுச்சி, இன்னைக்கு பாக்க முடியல என்ன செய்யுறதுனு கேட்கிறீங்களா? அதுக்கும் வழி இருக்கு. இந்த கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது என்பது, ஒரே நாளில் நடக்கும் நிகழ்வு கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, ஒரு மாதத்திற்கு முன்னரே கண்களுக்கு தெரிய தொடங்கிவிடும். மெல்ல நகர்ந்து நேர்க்கோட்டில் இன்னைக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. அதனால், நேற்று தவறவிட்டுவிட்டால் இன்றைக்கு தெரியும்.ஆனா என்ன, நேர்க்கோட்டில் இல்லாமல் கொஞ்சம் சைடு வாங்கி இருக்கும். நாளையும் தெரியும், அப்போது இன்னும் கொஞ்சம் சைடு வாங்கியிருக்கும். எனவே இதனை பார்க்காமல் மிஸ் செய்தவர்கள் இன்று பார்த்துவிடுங்கள்.