இன்று முதல் ஜூன் 2 வரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை..!

மே மாதம் 1 ஆம் தேதி முதல் வரும் ஜூன் இரண்டாம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளுக்கு கோடை விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் இந்த விடுமுறை நாட்களில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் மே மாதம் 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் நீதிபதி ஏ.டி ஜெகதீஷ் சந்திரா, ஆர் கலைமதி மற்றும் கே குமரேஷ் பாபு ஆகியோர் அவசர வழக்கை விசாரிப்பார்கள்.
மே 15 மற்றும் 16ஆம் தேதி களில் நீதிபதி பி டி ஆஷா, ஆர் சக்திவேல் என் செந்தில்குமார் ஆகியோரும், மே 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், பி பி பாலாஜி, சி சரவணன் ஆகியோரும் அதன் அடுத்தபடியாக இரு தேதிகளில் மூன்று நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் வாராந்தோறும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.