1. Home
  2. தமிழ்நாடு

‘அன்பெனும்' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது..!

1

விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக நிலவி வருகிறது. 

 விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.

இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது.

இதனிடையே, இன்று லியோ படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகிவுள்ளது.

Trending News

Latest News

You May Like