1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் தடாலடியாக குறைந்த கொரோனா எண்ணிக்கை!

சென்னையில் தடாலடியாக குறைந்த கொரோனா எண்ணிக்கை!


சென்னையில் தடாலடியாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கிய நாளில் இருந்து தினமும் சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக பதிவாகி வந்தது. ஒருகட்டத்தில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 4 ஆயிரம் பேரை வரை பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் தடாலடியாக குறைந்த கொரோனா எண்ணிக்கை!

சில தினங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிலையில், அது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் இன்று சென்னையின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

புதிதாக 885 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,90,949 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 1,75,128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 12,285 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3536 பேர் உயிரிழந்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like