1. Home
  2. தமிழ்நாடு

லிஸ்ட் ரெடி..! தமிழக பாஜகவில் 261 கிரிமினல்கள்.. மொத்தம் 1977 வழக்குகள் - செல்வப்பெருந்தகை..!

1

சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செல்வப்பெருந்தகை குற்றப் பின்னணி உடையவர்" என்று விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது தமிழக பாஜகவில் உள்ள குற்ற பின்னணி கொண்டவர்களின் பட்டியலை செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "துக்க வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன் கோபத்துடன், என்னை ரெளடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கள் யாரையும் குற்றவாளிகள் என்று தெரிவிக்கவில்லை. ஆருத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேசி வருவதால், அதுகுறித்தும் விசாரிக்க கோரினோம். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை என்று ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற முன்னாள் முதல்வர்களே புகழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கொண்டேவுள்ளார். குற்றப் பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளேன். அண்ணாமலை எதற்காக தீடீரென ராஜிநாமா செய்தார் என்பதை ஆராய வேண்டும்.

எல்லோரையும் மிரட்டிக்கொண்டு வந்த அண்ணாமலையின் எதிர்காலம் தற்போது காங்கிரஸ் கையில் இருக்கிறது. என்மீது அவதூறு பரப்பியதற்காக காவல்துறையில் புகார் கொடுக்கலாம். தமிழகத்தில் எஸ்சி ஆணையம் மிக வலிமையானதாக இருக்கிறது. அப்படி கொடுத்தால் உன்னுடைய நிலைமை என்ன ஆகும்? மகாத்மா காந்தியை சுட்டுக்கொல்லும் போது ராம், ராம் அவரை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். நாங்கள் அந்த வழியில் வந்தவர்கள். எனவே அண்ணாமலையை தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். துக்க வீட்டில் போனால் என்ன பேசவேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் எனத் தெரியவில்லை.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசும் அண்ணாமலை, இந்திரா காந்தியை துர்கா தேவி என்று வாஜ்பாய் புகழ்ந்ததை ஏன் பேசவில்லை. மருத்துவத்துக்காக என்னை அமெரிக்கா அனுப்பியதற்கு ராஜிவ் காந்திக்கு, வாஜ்பாய் நன்றி தெரிவித்த வரலாறை ஏன் பேசவில்லை? என்னை குற்றப் பின்னணி கொண்டவர் என்று பேசிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கோர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like