1. Home
  2. தமிழ்நாடு

லைசென்ஸ் காணாமல் போயிடுச்சா.. டூப்ளிகேட் உரிமம் பெறுவது மிக சுலபம்!

1

ஒவ்வொரு வாகன ஓட்டுநரும் கையில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாக டிரைவிங் லைசென்ஸ். உள்ளது. ஓட்டுனர் உரிமத்தை பாஸ் பண்ணி பெறுவது என்பது தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மறக்க முடியாத ஒன்று. அத்துடன் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் காவல்துறையின் நடவடிக்கைகளில் சிக்க வேண்டி வரும்.

இப்படி கட்டாய ஆவணமாக இருக்கும் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டால் டுப்ளிகேட் ஆவணம் பெறலாம். இதுக்குறித்து தற்போது பார்க்கலாம். ஓட்டுனர் உரிமம் தொலைந்தாலோ, அல்லது சேதம் அடைந்தாலோ ஆன்லையில் விண்ணப்பித்து டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் பெறலாம். வீட்டில் இருந்தபடியே சுலபமாக இந்த ஆவணம் கிடைக்கும்.

முதலில் ஓட்டுனர் உரிமம் காணாமல் போனால் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்க வேண்டும். அங்கு எஃப்ஐஆர் பதிவு செய்து கொடுக்கப்படும். இதனையடுத்து ஆன்லைனில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முதலில் parivahan.gov.in எனப்படும் போக்குவரத்து துரையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் நுழைய வேண்டும். இதில் ஆன்லைன் சேவை என்ற பிரிவில் டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான சேவைகள் காட்டப்பட்டு இருக்கும். இந்த ஆப்ஷனை தேர்வு செய்து உள்ளே நுழைந்த வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட மாநிலம் எதுவோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.

இதனையடுத்து டூப்ளிகேட் லைசென்ஸ் பெறுவதற்கான ஆப்ஷன் காண்பிக்கப்படும். இதனை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் ஒன்றன்பின் பண்றாக நிரப்ப வேண்டும். அதன்பின்னர் LLD படிவத்தை பூர்த்தி செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்பிக்க வேண்டும். இதனையடுத்து 30 நாட்களுக்கு பிறகு டூப்ளிகேட் லைசென்ஸை விண்ணப்பத்தாரர் பெறலாம்.

Trending News

Latest News

You May Like