ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் சுற்றில் விலை போகாத ஜாம்பவான்!
ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் முதன்முறையாக துபாயில் இன்று (டிசம்பர் 19) மதியம் தொடங்கியுள்ளது.இந்த நிலையில் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவலை ரூ.7.4 கோடிக்கு அதிரடியாக வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி அணியும், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றித்தேடி தந்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டை சென்னையுடன் போட்டிப்போட்டு ரூ.6.8 கோடிக்கு வாங்கியது ஹைதாராபாத் அணி.
எனினும் முதல் செட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் கருண் நாயர், மணீஷ் பாண்டே மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தென்னாப்பிரிக்கா வீரர் ரூசோவ் ஆகியோரை எந்த அணியும் எடுக்க முன்வராதது ஆச்சரியம் அளித்துள்ளது.
இந்த மினி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 333 பேர் பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள். மீதம் உள்ள 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த ஏலத்துக்காக 10 அணிகளும் சுமார் ரூ.262.95 கோடியை செலவழிக்க காத்திருக்கும் நிலையில் தற்போது ஏலம் தொடங்கியுள்ளது.