எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு அவரது பதவிக்கு அழகல்ல..!

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பலத்தால் பிரதமரை பார்லிமென்டிற்கு வர வைத்துள்ளோம். பிரதமர் மோடி பார்லிமென்டிற்கு வந்து பேச வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம் என்றார். மேலும், அவர் பிரதமர் மோடியை நீரவ் மோடியுடன் ஒப்பிட்டு பேசினார். இதையடுத்து, அவர் பிரிட்டிஷ் ஜனநாயகப்படி லோக்சபா நடக்கிறது என்றார்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு அவரது பதவிக்கு அழகல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பிரதமர் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. இதை அவையில் இருந்து நீக்க வேண்டும். காங்கிரஸ் எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.