கோவில் நிலத்தை ஆக்கிரமித்த இந்து மகாசபை தலைவர்... அதிரடி காட்டிய அமைச்சர் !!
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தப் பின்னர் இந்து அறநிலையத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தமிழகம் முழுவதும் சுற்றி ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டு நடவடிக்கை எடுத்துவருகிறார்.
சென்னை வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில் நிலங்கள், கோவை, திருப்பூர், சிவகங்கை என தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது கோவில் நிலங்களை மீட்கவேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
எனினும் திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான நடவடிக்கை தொடர்கிறது. ஆனால், நிலங்களை மீட்கவேண்டும் என கோரிக்கை விடுத்த இந்து அமைப்பின் தலைவரை சென்னையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, காஞ்சிபுரம் அ/மி ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள Kilpauk-Taylors road பகுதியில் இந்து மகா சபை தலைவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் இன்று (26.07.21) மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது, என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, காஞ்சிபுரம் அ/மி ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள Kilpauk-Taylors road பகுதியில் இந்து மகா சபை தலைவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் இன்று (26.07.21) மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. pic.twitter.com/MVsMnMLIYb
— P.K. Sekar Babu (@PKSekarbabu) July 26, 2021
newstm.in