1. Home
  2. தமிழ்நாடு

இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் பாயும் எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட்..!

1

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு வானிலை தொடர்பான செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஓராண்டு வரை தனக்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் சுதந்திர தினமான நேற்று  SSLV-D3 ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாகக் காரணங்களால் இன்று  EOS-08 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த இந்த ராக்கெட் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்த இஒஎஸ்-8 செயற்கைக்கோள் சுமார் 175 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைகோளில் உள்ள ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். இது ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

EOS-08 பணியின் முதன்மை நோக்கம், மைக்ரோசாட்லைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்கால செயல்பாட்டு செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவை அடங்கும் என இஸ்ரோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like