மே 31 கடைசி நாள்..வங்கிக் கணக்கு மூடப்படும்..!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மே மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், வங்கி வாடிக்கையாளர்கள் மே 31ஆம் தேதிக்குள் ஒரு ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் கணக்கு மூடப்படும்.
மூன்று ஆண்டுகளாக செயல்படாத கணக்கு வைத்திருப்பவர்களின் சேமிப்பு கணக்கு ஒரு மாதத்திற்குள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மூன்று வருடங்களாக எந்த விதமான பரிவர்த்தனையும் இல்லாத சேமிப்புக் கணக்குகள் மற்றும் இந்தக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணமும் பூஜ்ஜியமாக இருந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வங்கியில் உங்கள் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றாலோ அல்லது அதில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்றாலோ கவனமாக இருக்க வேண்டும். அத்தகைய வங்கிக் கணக்கின் கேஒய்சி சரிபார்ப்பு மே 31ஆம் தேதிக்குள் முடித்துவிட்டால் பிரச்சினை இல்லை. கணக்கு மூடப்படாது.
டிமேட்-லாக்கர்களுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்குகள் அல்லது 25 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கணக்குகள் அல்லது PMJJBY, SSY, PMSBY, SPY ஆகிய திட்டங்களுக்காக திறக்கப்பட்ட கணக்குகள் மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வகையான கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.