1. Home
  2. தமிழ்நாடு

விண்ணப்பிக்க மே 15 கடைசி நாள்..! பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி கிடைக்கும்..!

1

மத்திய மற்றும் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் மத்திய அரசின் கன்யா உத்தன்யோஜனா திட்டன் பெண் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு ரூ. 50000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் சுமார் ஒன்றரை கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.இன்னும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேர மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அல்லது மதம் போன்ற கட்டுப்பாடு இல்லை. இது அனைவருக்கும் சமமான திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு முதலில் ரூ. 600, பின்னர் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ. 700, 6 முதல் 8 ஆண்டுகள் வரை ரூ. 1000 மற்றும் வழங்கப்படுகிறது. 9 முதல் 12 வயது வரை ரூ. 1500 கிடைக்கும். இதன் பிறகு, பெண்கள் பட்டம் பெறும்போது அவர்களுக்கு மொத்தமாக 50,000 ரூபாய் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற பெண் குழந்தை பீகார் மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் இரண்டு மகள்கள் இத்திட்டத்தின் பலனைப் பெறலாம்.

பெண் குழந்தைகளின் ஆதார் அட்டை, பெண் குழந்தைகளின் பெற்றோரின் ஆதார் அட்டை, பெண் குழந்தைகளின் வங்கி பாஸ்புக், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பெற்றோரின் மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும். இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் இந்த திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like