4 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்...இருவருக்கும் ஒரே கணவன்.. போட்டுக் கொடுத்த பேஸ்புக்..!

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபு பிலிப் என்பவர் இதுவரை நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில், ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தலைமறைவாகி, இரண்டாவது முறை ஒரு பெண்ணை திருமணம் செய்து தமிழகத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அதன் பிறகு, அவரையும் ஏமாற்றிவிட்டு, எர்ணாகுளத்தை சேர்ந்த பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
நான்காவது முறையாக, ஆலப்புழாவை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் முகநூல் பழக்கம் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நான்காவது மனைவிக்கு அவருடைய இரண்டாவது மனைவியுடன் முகநூல் நட்பு இருந்தது. இருவரும் தங்கள் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட போது, இருவருக்கும் ஒரே கணவன் என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நான்காவது மனைவி, காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், தீபு பிலிப் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களை காதலிப்பதாக கூறி திருமணம் செய்வது அவர்களிடம் நகை பணத்தை பறித்துக் கொண்டதும் எஸ்கேப் ஆவது என இதனை ஒரு தொழிலாகவே செய்து வந்திருக்கிறார். யாராவது அழகான பெண்ணை பார்த்து விட்டால் உடனடியாக அவர்களிடம் வழிந்தோ கெஞ்சியோ காதலிப்பதாக கூறியோ பேசிபழகி, தான் யாரும் இல்லாத அனாதை, பல ஆண்டுகளாகவே தனியாக வசித்து வருகிறேன் என கதை விட்டு, மனம் இறங்கும் பெண்களை வலையில் விழ வைப்பது தான் இவரது வேலை எனக் கூறப்படுகிறது.
வலையில் விழுந்தவர்களுடன் திருமணம் முடிந்ததும் அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பிச் செல்வது இவருக்கு வழக்கம் என கூறப்படுகிறது.
அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பெண்களும் புகார் அளிக்க தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் தீபு பிலிப்.