தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த நீதிபதி..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துாய்மைப் பணித் திட்ட சிறப்பு முகாமை உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களைப் பாராட்டிப் பேசினார்.
அப்போது, மூத்த துாய்மை பணியாளர்களான உமாவதி, ராஜாமணி ஆகியோரை உட்கார வைத்து, அவர்களுக்குப் பாத பூஜை செய்து, வணங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் பிரபு, நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆகியோரும் தூய்மை பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியைத் துவக்கி வைத்தனர்.