இர்ஃபான் விவகாரம்.. நடவடிக்கை பாய்ந்தது..!
குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் எனவும் புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைக்கு முதல்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.