இந்திய அணி அதிர்ச்சி தோல்வி..!
9வது ஆசியக்கோப்பை மகளிர் டி20 தொடரானது இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியில் இந்திய அணியானது ஹர்மர்ன்பிரீத் பவுர் தலைமையிலும், இலங்கை அணியானது சமாரி அட்டப்பட்டு தலைமையிலும் களம் காண்கின்றன.
முதலில் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 165/6 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை, 167/2 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. 61 ரன்கள் அடித்து 1 விக்கெட் வீழ்த்திய இலங்கை கேப்டன் அத்தப்பத்து, ஆட்டநாயகி விருது பெற்றார். இலங்கை முதன்முறையாக மகளிர் ஆசிய கோப்பையை வென்றுள்ளது.