இந்திய அணி சாம்பியன்... பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!

தொடர்ந்து, 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா, கில் ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது. ரோகித் ஷர்மா, சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டார். இதனால், 41 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்கள் குவித்தது.
அணியின் ஸ்கோர் 105ஆக இருந்த போது கில் 31 ரன்னில் சான்ட்னர் பந்தில் அவுட்டானார். கவர் திசையில் தூக்கி அடிக்கப்பட்ட பந்தை, பிலிப்ஸ் பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள், கோலி 1 ரன்னில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.டபுள்யூ., முறையில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் ஷர்மா, 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்தில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். இதன்முலம் வெறும் 17 ரன்னுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதனால், இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நெருங்கியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, அக்ஷர் படேலும் 29 ரன்னில் அவுட்டானார். தற்போது, வெற்றியை நோக்கி இந்திய அணி மெல்ல மெல்ல முன்னேறியது.
இறுதியில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில், ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன்மூலம், 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. தற்போது, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது.
இந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர் நாயகன்தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்முஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மிக உயிரிய பாராட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள்.
பிரதமர் மோடிஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்த நமது கிரிக்கெட் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த தொடர் முழுதும் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்த வெற்றி வரலாற்றை உருவாக்கி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். நமது அனல் பறக்கும் ஆற்றலும், ஆடுகளத்தில் நமது அசைக்க முடியாத ஆதிக்கமும் தேசத்தை பெருமைப்படுத்தியது. இந்த வெற்றி புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்
மகத்தான வெற்றி. இந்திய அணி வீரர்கள், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றனர். இந்திய அணியின் சிறப்பான ஆட்டம், செயல்திறன் மற்றும் களத்தில் ஆதிக்கம் ஆகியவை ஊக்கமளிப்பதாக இருந்தது. சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்.
உ.பி., முதல்வர் யோகி
வரலாற்று வெற்றி. சாம்பியன்களுக்கு வணக்கங்கள். நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய அணியின் ஒவ்வொரு வீரரையும் நினைத்து நாடு பெருமை கொள்கிறது.
முதல்வர் ஸ்டாலின்
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள். சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கும் வாழ்த்துகள். ரோகித்தும், அவரது அணியினரும், சூழலுக்கு ஏற்ப தொடர் முழுதும் சிறப்பாக விளையாடினர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,
துபாயில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரட்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடர்முழுதும் தோல்வி அடையாத இந்திய அணி கோப்பை வெல்வதற்கு தகுதியானது.
சச்சின் டெண்டுல்கர்
சாம்பியன்ஸ் டிராபி வென்ற சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்