1. Home
  2. தமிழ்நாடு

இந்திய அணி ஷாக்..! ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பின்னுக்குத்தள்ளி மீண்டும் முதலிடம்..!

1

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியானது. இதில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி (117 புள்ளி) தற்போது இரண்டாம் இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா (118 புள்ளி) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததாலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலமாக, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இப்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 3 முதல் 5 இடங்களில் முறையே இங்கிலாந்து (115 புள்ளி), தென் ஆப்பிரிக்கா (106 புள்ளி), நியூசிலாந்து (95 புள்ளி) அணிகள் உள்ளன.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேற்றியுள்ளது. கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடாக இந்திய அணி திகழ்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணி டி20, டெஸ்டினை டிரா செய்தது. ஒருநாள் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் சமன் மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை பெற்று 54.16 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தென்னாப்பிரிக்கா, மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து, நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணி தரவரிசை:

1) ஆஸ்திரேலியா (118 புள்ளிகள்).

2) இந்தியா (117 புள்ளிகள்).

3) இங்கிலாந்து (115 புள்ளிகள்).

4) தென்னாப்பிரிக்கா (106 புள்ளிகள்).

5) நியூசிலாந்து (95  புள்ளிகள்).

Trending News

Latest News

You May Like