செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் சென்னை கரூர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடு பட்டதாக அவர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்க துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் என தொடர்ந்து விசாரணை சோதனை நடத்தினர். குறிப்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது,இந்த சோதனைகளில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பணப்பரிவர்த்தனை , வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு தொடர்புடைய 10 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக வருமான வரித்துறையில் இருந்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்த சூழலில் கடந்த 3ம் தேதி அசோக்குமாரின் வழக்கறிஞர் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் . ஆவணங்கள் திரட்டுவதில் கால தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆஜராவதில் தாமதம் ஏற்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.