டீச்சரின் செயின் பறித்து… காதை அறுத்து… ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டு… பதற வைக்கும் சம்பவம்!

ஷேர் ஆட்டோவில் வந்த பள்ளி ஆசிரியையின் செயினை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டு சென்ற பெண் மற்றும் அந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
பம்மல் கிருஷ்ணா நகரை சேர்ந்த சரஸ்வதி, ஊரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பம்மலில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி ஆடுதொட்டி அருகே வந்த போது ஆட்டோவில் ஏற்கனவே இருந்த பெண் ஒருவர் ஆசிரியையின் கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
இதில் சாலையில் விழுந்த ஆசிரியைக்கு முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது. கீழே விழுந்த ஆசிரியர் கூச்சலிடவே கண்ட பொது மக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆசிரியையை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்த மாங்காட்டை சேர்ந்த பிரசாந்த, என்றும் அருகில் அமர்ந்து இருந்தவர் பம்மலை சேர்ந்த ரோஸ்மேரி என்றும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in