வாட்ஸ் அப் சாட்டிங்கால் வந்த வினை… மனைவி கழுத்தில் குத்தி கொன்ற கணவன்!

வாட்ஸ் அப்பில் மனைவி அவரது ஆண் நண்பருடன் சாட் செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மணிகண்டன் - சிந்துஜா தம்பதிக்கு யாஷிகா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. சிந்துஜா வாட்ஸ் அப் மூலம் ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் சிந்துஜாவின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த சிந்துஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து மணிகண்டன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in