ரகசிய திருமணத்தை முறித்துக் கொண்ட பெண்… குத்தி கொலை செய்த கணவன்!

பெயிண்டர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட பொறியியல் படித்து வரும் பெண் ஒருவர் அந்த உறவை முறித்துக் கொண்டதால், அவரது கணவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த தேஜேஸ்வினி என்ற பெண்ணும், சின்னசாமி என்ற பெயிண்டரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர், தேஜஸ்வினியை வீட்டில் அடைத்து வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி தேஜேஸ்வினி வீட்டுக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேஜேஸ்வினியை சரமாரியாக குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளர்.
இதனையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சின்னசாமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விஜயவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in