தலையணையால் அமுக்கி மனைவியைக் கொன்ற கணவன்!

அரியலூர் அருகே கட்டிய மனைவியை தலையணையை வைத்து கொன்ற கணவர் மீது மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருங்கூர் கிராமத்தில் வசித்து வரும் இளம்பரிதி என்பவர். இவர் அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி அன்று தனது மகனை அழைக்க மனைவியின் வீட்டிற்கு இளம்பரிதி சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, தனது மனைவியை தலையணை வைத்து இளம்பரிதி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளம்பரிதி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது சிறையில் அடைத்தனர்.
இளம் பரிதி போன்றவர்கள் வெளியே இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினாலும், குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
அந்த பரிந்துரையை ஏற்று, இளம்பரிதியயை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார்.