18 வயதே நிரம்பிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

18 வயதே நிரம்பிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

18 வயதே நிரம்பிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்!
X

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வடுகர்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (23). பால் வியாபாரியான தமிழரசனும் இவரது மனைவி பிரியதர்ஷினியும் (18)  காதலித்து 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில், தமிழரசன் அடிக்கடி மது அருந்தி விட்டு பிரியதர்ஷினிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக  தெரிகிறது.

இந்நிலையில் இன்று மதியமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தமிழரசன், பிரியதர்ஷினிடம் பெரியளவில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது
ஆத்திரமடைந்த தமிழரசன், பிரியதர்ஷினியை அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தார்.

சடலத்தை மீட்ட ஆண்டிமடம் காவல்துறையினர்  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்வழக்குப் பதிந்த காவல்துறையினர்  தமிழரசனைக் கைது செய்தனர்.

Next Story
Share it