இல்லத்தரசிகள் ஷாக்..! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு..!
தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஆனால் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 அதிகரித்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 அதிகரித்து ரூ.79,500-க்கும் ஒரு கிராம் ரூ.1.50 அதிகரித்து ரூ.79.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.