இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! பூ, பழங்களின் கடும் விலை உயர்வு..!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்றில் இருந்தே தமிழகம் முழுவதும் களைகட்டி வருகிறது. இந்நிலையில், சாதாரண நாளை காட்டிலும் இன்று பூ, பழங்களின் விலை இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்களின் கூட்டம் அலைமோதி கொண்டிருப்பதால் அதற்கென அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை மன நிறைவுடன் படையலிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று மகழ்ச்சியாக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.