இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு..!
அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. அதிரடியாக உயர்வதும், பின்னர் சீராக விலை இறங்குவதும் என நிலைமைகள் மாறின.
இந்நிலையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 75 ரூபாய் உயர்ந்து ரூ.7,205 ஆகவும், சவரன் ரூ.57,640 ஆகவும் இருக்கிறது.
இந்த வாரத்தின் 2வது நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்றும்(டிச.9), இன்றும்(டிச.10) மட்டும் 720 ரூபாய் தங்கம் விலை அதிகரித்துள்ளது, பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வெள்ளியின் விலையில் ஒரே நாளில் கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 104-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.