இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக்.,24) , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,285 ரூபாய்க்கும்; சவரன், 58,280 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 110 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (அக்.,25) தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 7,295 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 58,360 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (அக்.,26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.