மூன்று பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்டு கிராமமே வேடிக்கை பார்த்த கொடூரம்!

மூன்று பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்டு கிராமமே வேடிக்கை பார்த்த கொடூரம்!

மூன்று பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்டு கிராமமே வேடிக்கை பார்த்த கொடூரம்!
X

மந்திரவாதி ஒருவர் சொல்வதைக் கேட்டு ஒரு கிராமமே மூன்று பெண்களை ஆடையின்றி நிர்வாணமாக பல பேர் முன் நிற்க வைத்த கொடுமை நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கார்வா பகுதி அடுத்த நாராயன்பூர் கிராம தலைவரின் இரண்டு மகள்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் ஊர் தலைவர் ஜோசியர் ஒருவரிடம் அதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அந்த ஜோசியர், கிராமத்தில் உள்ள மூன்று பெண்களும், ஒரு ஆணும் சேர்ந்து தலைவரின் மகள்களுக்கு சூனியம் வைத்துள்ளதாகவும், அதை சரிசெய்ய அவர்களை நிர்வாணமாக ஊரார் முன்னிலையில் போக செல்ல வேண்டுமென்றும் கூறினார்.

தன் மகள்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஊர் தலைவர், பரிகாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யச் சொன்னார். அதன்படி இரவு அந்த ஊரிலுள்ள 100 ஆண்களுக்கு மத்தியில் மூன்று பெண்களையும், ஒரு ஆணையும் நிர்வாணமாக நடந்து போக சொன்னார்கள்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஊர் பொது மக்கள் சிலரும், வார்டு கவுன்சிலரும் தடுக்க முற்ப்பட்டனர். அப்போது ஊர் தலைவரின் ஆட்கள் அவர்களை தாக்கினர் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த பரிகாரத்தை தடுத்து நிறுத்தி சம்பவத்திற்கு காரணமான இரண்டு பேரை கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it