அதிர்ச்சி! நடிகர் ராஜசேகர், மனைவி ஜீவிதாவுக்கு கொரோனா!

தெலுங்கு திரையுலக நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் அன்று முதல் இன்று வரை தனக்கு என தனி இடத்தை தக்கவைத்திருப்பவர் டாக்டர் ராஜசேகர், இந்த நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்தினக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
Get Well Soon Sir https://t.co/EaP4YPgWnR
— Dina Maalai (@DinaMaalai) October 17, 2020
அதில், "எனக்கும், எனது மனைவி ஜீவிதா மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறோம். தற்போது, கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து எனது குழந்தைகள் முழுமையாக குணமடைந்துவிட்டனர். ஆனால், நானும் ஜீவிதாவும் சிகிச்சையில் முன்னேறி வருகிறோம். விரைவில் வீடு திரும்புவோம். என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த தெலுங்கு திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவரது ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் அவரது குடும்பம் பூரண நலம் பெற பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரபல நடிகை தமன்னா, நடிகை ஜெனிலியா, டைரக்டர் ராஜமெளலி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.