கொடூரத்தின் உச்சம்..! பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பலாத்காரம்.. ஒருவர் பலி..!

பொதுவாக நமது நாட்டில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிறப்பாகவே உபசரிக்கப்படுவார்கள். ஆனால், சில நேரங்களில் சிலர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
கர்நாடகாவைச் சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் உட்பட இரு பெண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 6ஆம் தேதி இரவு நடந்துள்ளது. இரவில் சுற்றிப் பார்க்க வெளியே சென்ற 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் என இரண்டு பெண்களை, மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தள்ளனர். அதனை தடுக்க முயன்ற ஆண் சுற்றுலாப் பயணியை, குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கின்றனர்.
இரவு 11:30 மணியளவில் கொப்பலில் உள்ள ஒரு கால்வாய் அருகே சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல். மற்ற இருவரும் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர் புகார் அளித்துள்ளார். 29 வயதான அந்த பெண் தனது புகாரில், தானும் நான்கு விருந்தினர்களும் அன்று இரவு இரவு உணவு சாப்பிட்ட பிறகு துங்கபத்ரா இடது கரை கால்வாய் கரையில் நடந்து சென்று கொண்டு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்..
அப்போது குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் ஒரு பைக்கில் வந்துள்ளனர்.. அவர்கள் முதலில் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று சாதாரணமாகவே கேட்டுள்ளனர். பின்னர் சில நொடிகளில் இஸ்ரேலிய பெண்ணிடம் ரூ.100 கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளனர். சுற்றுப் பயணிகள் பணம் கொடுக்க மறுத்த நிலையில், இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆண் பயணிகளை கால்வாயில் தள்ளிய அவர்கள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் பைக்கில் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.