கொடூரத்தின் உச்சம்..! பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு இறை போட்ட அதிர்ச்சி சம்பவம்..!
ஜோஹன்னஸ் பெர்க்கின் லிம்போபோ மாகாணத்தில், வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணையில், அவ்வப்போது தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அப்பகுதியில் வசிக்கும் கறுப்பின மக்கள் யாருக்கும் தெரியாமல் சென்று எடுத்துவருவார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்காகக் கடந்த மாதம் மரியா மற்றும் லொகாடியா ஆகிய இரண்டு கறுப்பின பெண்கள், வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணைக்குச் சென்ற நிலையில், திரும்பி அங்கிருந்து அவர்கள் இருவரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் போலீஸ் நடத்திய விசாரணையில், இரண்டு பெண்களும் பண்ணைக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூர சம்பவம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இரண்டு பெண்களின் உடல்களும் பன்றிகளால் சாப்பிட்டு எச்சம் வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விவிகாரம் தொடர்பாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளதாவது, பழைய கெட்டுப்போன பொருள்கள் பண்ணைக்குள் கொட்டிவிட்டுச் சென்றதும், அப்போது இந்தப் பெண்கள் அங்கு உணவுத் தேடி சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகப் பண்ணையின் உரிமையாளர், அத்துமீறி யார் பண்ணைக்குள் நுழைந்தாலும் சுட்டுக் கொல்லும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததும், தெரிய வந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு தொழிலாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.