1. Home
  2. தமிழ்நாடு

கொடூரத்தின் உச்சம்..! வரதட்சனை போதவில்லை.. மருமகளுக்கு HIV தொற்று ஊசியை செலுத்திய மாமியார்..!

1

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த சேர்ந்த நாதிராம் சைனியின் மகன் அபிஷேக் என்கிற சச்சினுக்கு கடந்த 2023 ஆம் பிப்ரவரி 15 ஆமி தேதி திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது மணமகனின் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக ஒரு காரும் 15 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

இருப்பினும் அதில் திருப்தி அடையாத பெண்ணின் மாமியார், ஸ்கார்பியோ எஸ்யூவி காரையும் 25 லட்சம் ரூபாயும் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். தொடர்ந்து கார் மற்றும் பணம் கேட்டு மருமகளை பாடாய் படுத்தியுள்ளார் அந்த மாமியார். ஆனால் அந்த பெண், தனது பெற்றோரிடம் மீண்டும் மீண்டும் கேட்க முடியாது என மறுத்துள்ளார்.

மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தையும் காரையும் கொடுக்க முடியாத சூழலில் பெண் வீட்டார் இருந்தனர். அதனால் அதுகுறித்து எவ்விதப் பதிலும் சொல்லாமல் இருந்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், 30 வயது மருமகள் சோனால் சைனியை வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர்.. பின்பு ஹரிதுவாரில் உள்ள கிராம பஞ்சாயத்தினரின் தலையீட்டால் சோனாலை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொண்டார். இருந்தும் சோனாலை உடல், மன ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சோனாலை கொலை செய்வதற்குத் துணிந்து அவருக்கு எச்ஐவி ஊசி குத்தியுள்ளனர்.

அவரது உடல்நிலையும் மோசமடைந்ததை அடுத்து அந்த பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது கணவருக்கு ஹெச்ஐவி தொற்று இல்லை என்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்த நிலையில் மார்ச் மாதமே அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் பெண்ணை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் அவருக்கு ஹெச்ஐவி ஊசியை செலுத்தி அவரது வாழ்க்கையை கேள்வி குறியாக்கியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் சஹரன்பூர் நீதிமன்றத்தை நாடினர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கங்கோ கோட்வாலி போலீசார் அபிஷேக் என்கிற சச்சின், அவரது பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மீது வரதட்சணை துன்புறுத்தல், தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வரதட்சனை கேட்டு மாமியாரே மருமகளுக்கு ஹெச்ஐவி தொற்றுகளை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News

Latest News

You May Like