கொடூரத்தின் உச்சம்..!! சிறுமியை கற்பழித்து 100 ரூபாய் கொடுத்து ஈடு கட்டிய கொடூரம்..!
உ.பி யில் 14 வயது பட்டியலினச் சாதிப் பெண், தன்னை இரண்டு உயர்சாதி ஆட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் ஆகிய இரண்டு உயர்சாதி ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறினார்.
அதன் பின்னர் தன்னை அச்சுறுத்தியதாகவும், சம்பவத்தை வெளியில் கூறாமல் இருக்க 100 ரூபாய் கொடுத்து நடந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்குமாறு வற்புறுத்தியதாகவும் சிறுமி கூறினார். பணத்தை கொடுத்த பிறகு தொடர்ந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் புத்தகப் பையில் பணம் இருப்பதைக் கண்டு தாய் விசாரித்தபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த கொடூரமான சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், அக்டோபர் 8-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளான நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் ஆகியோரை கைது செய்தனர்.