1. Home
  2. தமிழ்நாடு

மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை... அதிரடி காட்டிய அரசு !

மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை... அதிரடி காட்டிய அரசு !


அரசு பள்ளியில் மாணவிகளை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டி பகுதியில், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக சுகுமாரி உள்ளார். இவர், இப்பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பள்ளி ஆசிரியர் ஸ்டீபன், மதிய உணவுக்குப்பின் தனது சாப்பாட்டு பாத்திரங்களை மாணவிகளிடம் கொடுத்து சுத்தம் செய்ய வற்புறுத்துவதாகவும் புகார் கூறப்பட்டது.

மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை... அதிரடி காட்டிய அரசு !

இதனடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, அண்மையில் பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டார். அவர் மாணவிகள், தலைமை ஆசிரியை, தொடர்புடைய ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். இதில், தலைமை ஆசிரியை சுகுமாரி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆசிரியர் ஸ்டீபன், நடுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

newstm.in


Trending News

Latest News

You May Like