ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ் டேக்!
ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டாக் தமிழகத்தில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.
சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினி வெளியிட்டதாக பரவிய அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த பல மாதங்களாக யாரையும் சந்திக்க முடியவில்லை என பல விஷயங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்ட பதிவில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது என்றும் அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று கூறியிருந்தார்.
இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டாக் தமிழகத்தில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020
newstm.in